5 மாவட்டங்களில் 102 டிகிரி வெயில்: அடுத்த 3 நாளும் அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் வறண்ட வானிலையால் பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி கொளுத்தியது. பாளையங்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் 102 டிகிரி, சென்னை, ஈரோடு, கரூர், மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் 100 டிகிரியும் நிலவியது. இதற்கிடையே, தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 18ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதுதவிர2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னை மற்றும் புறநகரில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்