ரூ100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் தலைமறைவான அதிமுக மாஜி அமைச்சரை கைது செய்ய 5 தனிப்படை


கரூர்: ரூ100 கோடி நில மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரவு பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதேபோல, கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதரும் போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறியிருந்தார்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் கடந்த 25ம்தேதி தள்ளுபடி செய்தது. தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கர் தமிழ்நாட்டில் அல்லது வடமாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தரப்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், 2 தனிப்படை போலீசார் தமிழகத்தில் உள்ள மாவட்ட பகுதிகளிலும், மூன்று தனிப்படை போலீசார் வெளிமாநில பகுதிகளுக்கும் விரைந்துள்ளனர். 5 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை கைது செய்யும் நோக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருவதால் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.

Related posts

இருவழிப்பாதை ஒரு வழியாக மாற்றம் பள்ளிபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்

நிலச்சரிவு: பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது..!!

செங்கல்பட்டில் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்