ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 கொத்தடிமைகள் மீட்பு: கோட்டாட்சியரிடம் ஒப்படைப்பு


திருத்தணி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் 4 ஆண்டுகளாக ெகாத்தடிமைகளாக இருந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள புளியங்கண் என்ற கிராமத்தில் சுரேஷ்குமார் என்பவரின் செங்கல் சூளையில் 4 ஆண்டுகளாக கொத்தடி மைகளாக பணியாற்றி வருவதாக, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. இதில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே செருக்கனூர் ஊராட்சி ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள்(33),

காமாட்சி(40), கார்த்தி(41), சீனு(14), சௌந்தர்யா(14) என்பதும் அவர்கள் 5 பேரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதும் 4 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. அவர்கள் 5 பேரையும் நேற்றுமுன்தினம் இரவு மீட்டு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபாவிடம் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொழிலாளர் நலத்துறை சார்பில் அவர்களுக்கு உதவி செய்யப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

Related posts

இந்தியாவில் மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5% நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் ‘போதையே ஏறலன்னு சொன்னாங்க… அதனாலதான் மெத்தனால் கலந்தோம்…’: சிபிசிஐடி போலீசாரிடம் சாராய வியாபாரி பரபரப்பு வாக்குமூலம்

வெடி மருந்துகளுடன் தந்தை, மகன் கைது