உபியில் அடுக்குமாடி இடிந்து 5 பேர் பலி: மேலும் பலர் சிக்கியதால் பதற்றம்


லக்னோ: உபியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 5 பேர் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசமாநிலம் லக்னோவில் டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் குடோனாக செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு கட்டுமான பணிகள் நடந்துவந்தன. நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென கட்டிடம் இடிந்து சரிந்தது. அப்போது அருகில் நின்ற லாரி மீதும் இடிபாடுகள் விழுந்தன. இந்த திடீர் விபத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடத்தில் சிக்கிய 3 பேர் பலியாகி சடலமாக மீட்கப்பட்டனர்.

24 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் கட்டிடத்தில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த பணிகளை உபி முதல்வர் யோகி கண்காணிப்பு அடிப்படையில் நிவாரண ஆணையர் ஜி.எஸ்.நவீன் குமார் களத்தில் இருந்து முடுக்கி விட்டுள்ளார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு