53வது நினைவுநாளையொட்டி அண்ணா நினைவிடத்தில் முதல்வர் நாளை மரியாதை: திமுக அறிவிப்பு

சென்னை: அண்ணாவின் 53வது நினைவுநாளை முன்னிட்டு நாளை, மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். சென்னை மாவட்ட திமுக வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சி தந்த காவியத் தலைவர், உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், தமிழ்மொழி உயர்வுக்காகவும் தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும் தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர். மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றம் செய்து தாய்க்கு பெயர் தந்த தனிப்பெரும் தனயன். தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாளினையொட்டி முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முன்னணியினர் நாளை காலை 8 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள். …

Related posts

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…

மகாவிஷ்ணு கைது விவகாரத்தில் சட்டம் கடமையை செய்துள்ளது: செல்வபெருந்தகை பேட்டி