டிகேஎம் மகளிர் கல்லூரியில் 51வது ஆண்டு விளையாட்டு விழா: எம்எல்ஏ பங்கேற்பு

வேலூர்: வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் 51வது ஆண்டு விளையாட்டு விழாவில் எம்எல்ஏ கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரியில் 51வது ஆண்டு விளையாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் டி.சிவகுமார் முன்னிலை வகித்தார். முதல்வர் பானுமதி வரவேற்றார். கல்லூரி செயலர் டி.மணிநாதன் வாழத்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக டிஎஸ்பி கோடீஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.

கல்லூரி விளையாட்டு துறை இயக்குனர் லோகேஷ்வரி, ஆண்டு விளையாட்டு அறிக்கை வாசித்தார். தொடர்ந்து, பல்வேறு விளையாட்டுகளில் சிறப்பாக விளையாடி பல விருதுகளைப் பெற்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக 60 பேருக்கு ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 500 தொகையினை கல்லூரி நிர்வாகம் வழங்கி பாராட்டியது. மேலும் சிறந்து விளங்குகின்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு அவர்களின் கல்விக் கட்டணத்தில் 60 சதவீதம் சலுகை அளித்துள்ளது. பின்னர் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்