5,165 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்

 

கடலூர், மே 5:கடலூர் மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடக்கிறது. இதில் 5,165 பேர் தேர்வு எழுத உள்ளனர். நாடு முழுவதும் எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ என்னும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024-25ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 5,165 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலூர் கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி, அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, கடலூர் முதுநகர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி, விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி, கடலூர் சிகே மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 7 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் காலை 11 மணிக்கே தேர்வு மையங்களுக்குள் வந்து விட வேண்டும். அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மாணவர்கள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மணிபர்ஸ் உள்ளிட்ட எந்த வித பொருட்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்