50 ஆண்டுகளை கடந்து பொன்விழா கொண்டாடிய அண்ணா மேம்பாலம்: புதுப்பிக்கும் பணி தீவிரம்

* சிறப்பு செய்தி
சென்னையில் 1970ம் ஆண்டு மக்கள் தொகை 20 லட்சத்தை கடந்து இருந்தது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்க தொடங்கியது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பெரிதளவில் எதும் கைகொடுக்கவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்க கூடிய அண்ணா சாலை – நுங்கம்பாக்கம் சாலை (உத்தமர் காந்தி சாலை) – (கதீட்ரல் சாலை) ராதாகிருஷ்ணன் சாலை – ஜி.என்.செட்டி சாலை ஆகியவை சந்திக்கும் புள்ளியில் 1970ம் ஆண்டு நாளொன்றில் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் கடந்து செல்வதால், ‘பீக் ஹவர்’ நேரத்தில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாகவும் இருந்தது.

இதன் காரணமாக அண்ணா சாலையில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் ஒன்று, மாநில நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்படும் என 1969ல் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, 1971ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இந்த கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். சுமார் 250 அடி நீளமும், 48 அடி அகலமும் கொண்டது இந்த மேம்பாலம். அனைத்து கட்டுமான பணிகளும் 21 மாதங்களில் முடிக்கப்பட்டு 1973ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.

இந்தியாவின் 3வது மேம்பாலமாக திகழ்ந்த இந்த பாலத்திற்கு அண்ணாவின் பெயரை (அண்ணா மேம்பாலம்) அவர் சூட்டினார். சென்னையின் தொன்மையான அடையாளங்களில் ஒன்றாக திகழும் அண்ணா சாலையில் அமைத்து இருக்கும் அண்ணா மேம்பாலம் நேற்று உடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்தது. 50 ஆண்டுகளைக் கடந்து கட்டுறுதியுடன் இருக்கும் இந்த பாலத்தில் இன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நாள்தோறும் கடந்துசெல்கிறது.
50ம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில், ரூ.8.85 கோடி மதிப்பீட்டில் தற்போது நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகள், விரைவில் நிறைவடைந்து மேம்பாலம் புதுப் பொலிவு பெறவிருக்கிறது.

அசர வைக்கும் ண்ணா மேம்பாலம்
* சென்னை அண்ணா சாலையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அண்ணா மேம்பாலம். கட்டிமுடிக்கப்பட்டு 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
* 1973 ஜூலை 1ல் இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இந்தியாவின் 3வது மேம்பாலம் என்ற பெருமையை பெற்றது இது.
* 700 மீட்டர் நீளம், 48 அடி அகலம் கொண்டது இந்த மேம்பாலம். 80 தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
* தமிழ்நாட்டில் குதிரை பந்தயம் தடை செய்யப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாக அண்ணா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இரண்டு பக்கமும் குதிரை உடன் இருக்கும் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
* 1973ம் ஆண்டு நடைபெற்ற விழாவில் இந்த மேம்பாலத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். ‘‘இது அறிஞர் அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும்” என்று அப்போது கூறினார்.

Related posts

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி