இமாச்சலில் 15 குழந்தைகள் உள்பட 50 பேர் மீட்பு

சிம்லா: இமாச்சலில் மண்டி மாவட்டத்தில் உள்ள ஷெக்னு கோனி கிராமத்தில் நேற்று முன்தினம் மேகவெடிப்பினால் கனமழை பெய்ததில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நிலச்சரிவில் சிக்கிய 15 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் 15 கிமீ. தூரம் நடந்து சென்று காப்பாற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். இதனிடையே, பாலாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால், பட்டி நகரையும் பின்ஜோர் பகுதியையும் இணைக்கும் மாரன்வாலா பாலம் அடித்து செல்லப்பட்டது. இதில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.

Related posts

அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை காணோம் ‘ஏர் ஷோ’வால் யாரும் வரவில்லை: காலியாக இருந்த இருக்கையிடம் ‘கதைகட்டிய’ ஜெயக்குமார்

கண்ணாடி மாளிகை, பறவையகம், இசைநீருற்று என சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

பழநியில் இன்று முதல் ரோப்கார் 40 நாட்களுக்கு ‘கட்’