50 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கேரளாவில் 5ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் திறப்பு: முதல்வர் பினராய் தகவல்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று அளித்த பேட்டி:  கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும். 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தியேட்டர்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.  மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தவும் 5ம் ேததி முதல் அனுமதிக்கப்படும். வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம், நிவாரண நிதி உள்ளிட்ட அரசு ேசவைகள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். ேநற்று கேரளாவில் 4991 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்த 37 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது. இவர்களின் உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று கொரோனாவால் 23 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து, இறந்தவர்கள் எண்ணிக்கை 3095 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

தவறு செய்தவர்களை சும்மா விடமாட்டோம்: அமைச்சர் நாரா.லோகேஷ் ஆவேசம்

10 டேங்கர் லாரியில் சப்ளை.! வந்தது நெய்யே இல்லை: தேவஸ்தான செயல் அதிகாரி தகவல்

பன்றி, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் கலப்பு திருப்பதி லட்டு தேசிய பிரச்னையானது: அறிக்கை கேட்கிறது ஒன்றிய அரசு, ஆந்திர முன்னாள் இன்னாள் முதல்வர்கள் பரஸ்பர குற்றச்சாட்டு