மோடி அரசில் 5.4% வளர்ச்சி மட்டுமே ஐமு கூட்டணி ஆட்சியில் சராசரி ஜிடிபி வளர்ச்சி 8.1 %: காங்கிரஸ் விளக்கம்

புதுடெல்லி: ஜிடிபி வளர்ச்சி குறித்து கடந்த வாரம் பேசிய பிரதமர் மோடி, நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி உலகப் பொருளாதார மந்த நிலையிலும், இந்தியாவின் பொருளாதாரம் மீட்சி பெற்று வலுவடைந்திருப்பதை காட்டுவதாக தெரிவித்திருந்தார். இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவரது எக்ஸ் பதிவில், “கடந்த ஜூலை-செப்டம்பர் காலண்டிற்கான ஜிஎஸ்டி வளர்ச்சியை அடிப்படையாக வைத்து, மாற்றத்தக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றி பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் மீண்டும் பேசி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அதன் நீண்ட கால ஆண்டு வளர்ச்சி விகிதம் முக்கியமானது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆண்டு சராசரி ஜிடிபி வளர்ச்சி 8.1 சதவீதமாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் இதுவரை ஆண்டு சராசரி ஜிடிபி வளர்ச்சி 5.4 சதவீதமாக மட்டுமே உள்ளது,” என்று கூறியுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி.. ஆருத்ரா மோசடியில் பாஜகவினருக்கு தொடர்பு: விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு!!

சென்னை-மஸ்கட் இடையே கூடுதலாக புதிய நேரடி விமான சேவையை தொடங்கியது சலாம் ஏர்” நிறுவனம்..!!

காமராஜர் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் தேசியத் திருவிழாவாக கொண்டாட வேண்டும்: செல்வபெருந்தகை வேண்டுகோள்