5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களை பாலீஸ் போட்டு தருவதாக செயின் அபேஸ்

 

கரூர், மே 31: கரூர் பசுபதிபாளையம் திருமாநிலையூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(38). இவர், பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 29ம்தேதி காலை தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்த போது, 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூன்று பேர் தன்னிடம் வந்து, தங்க நகைகளை சுத்தம் செய்து தருவதாக கூறினர். இதனை நம்பிய நான், என்னிடம் இருந்த இரண்டரை பவுன் தங்க செயினை அவர்களிடம் கொடுத்தேன்.

செயினை பெற்றுக் கொண்ட அவர்கள், ஏதோ கெமிக்கல்லை வைத்து செயினை சுத்தம் செய்வது போல நடித்தனர். தொடர்ந்து, சிறிது நேரத்திற்கு பிறகு என்னிடம் செயினை திரும்பி தந்து விட்டு சென்று விட்டனர்.
நான் செயினை பரிசோதித்த போது, அந்த செயினின் எடை ஒன்னே கால் அளவுதான் இருந்தது. எனவே, வந்தவர்கள் என்னை ஏமாற்றியது தெரியவந்தது என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பெண்ணிடம், தங்க செயினை சுத்தம் செய்து தருவதாக கூறி செயினை மாற்றி வழங்கிய ஏமாற்றிய மூன்று பேர்களை பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு