5 ரைஸ் மில்களில் ஐடி திடீர் ரெய்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் ஆரணி அடுத்த களம்பூரில் உள்ள

ஆரணி, ஏப்.13: ஆரணி அடுத்த களம்பூரில் உள்ள 5க்கும் மேற்பட்ட ரைஸ் மில்களில் நேற்று வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையில் திடீர் சோதனை நடத்தினர். தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலில் இருந்தது வருகிறது. மேலும், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு தொடர்ந்து 24 மணி நேரம் வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட மார்டன் ரைஸ் மில்களில் சென்னை மற்றும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த வருமான வரித்துறை இணை இயக்குனர் தலைமையில் 24க்கும் மேற்பட்ட குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மதியம் அதிரடியாக சோதனை நடத்தினர். மேலும், அந்த 5 ரைஸ் மில்களில் சோதனை தொடர்ந்து நடத்தி வந்தனர். அப்போது வருமானவரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படை குழுவினர் ரைஸ்மில்களில் இருந்த முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்து சோதனையை நடத்தினர். இந்த ரைஸ் மில்களில் சுமார் 8 மணி நேரம் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்து 5க்கும் மேற்பட்ட பைகளில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்து வாகனங்களில் எடுத்துச்சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’