5 மாநில தேர்தல் நடக்க உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் 100வது நாளாக மாற்றம் இல்லை

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன. இதன்படி பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சம் தொட்ட நிலையில், ஒன்றிய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி கலால் வரியை பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைத்தது. இதுபோல் பல்வேறு மாநில அரசுகளும் குறைத்தன. நேற்று பெட்ரோல் விலை சென்னையில் ரூ.101.40 டெல்லியில் ரூ.95.41, மும்பையில் ரூ.109.98, கொல்கத்தாவில் ரூ.104.67 எனவும், டீசல் விலை சென்னையில் ரூ.91.43, டெல்லியில் ரூ.86.67, மும்பையில் ரூ.94.14, கொல்கத்தாவில்  ரூ.89.79 எனவும் உள்ளது. வழக்கமாக தேர்தல் நடைபெறும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாறாமல் நீடிக்கிறது. உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதும் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தேர்தலுக்கு பிறகு விலை உயர வாய்ப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2020 மார்ச் 17ம் தேதியில் இருந்து ஜூன் 6ம் தேதி வரை 82 நாட்கள் விலை மாற்றமின்றி நீடித்தது குறிப்பிடத்தக்கது….

Related posts

அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

தங்கம் விலை சவரன் ரூ.57ஆயிரத்தை நெருங்குகிறது

மீண்டும் ஏற தொடங்கிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி