5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் தள்ளுபடியான 5.48 லட்சம் பேருக்கு நகைகள் திரும்ப ஒப்படைப்பு: பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை: 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் தள்ளுபடியான 5.48 லட்சம் பேருக்கு நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருக்கிறார். கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 3 நாட்களில் 5.48 லட்சம் பேருக்கு நகைகள் திரும்ப வழங்கப்பட்டுள்ளன. நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வரும் 31ம் தேதிக்கு பதிலாக நகைக்கடன் தள்ளுபடி பெற்ற அனைவருக்கும் வரும் 28ம் தேதிக்குள்ளேயே நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, தள்ளுபடி ரசீது தரப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி நம்பிக்கை தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், நகையே இல்லாமல் வெறும் பையை வங்கியில் வைத்து மோசடி செய்தவர்களுக்கு தள்ளுபடி கொடுக்கமுடியாது. அதனால்தான் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி முதலில் ஆய்வு செய்தோம். அதன் பிறகு ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு அதிகாரிகளை அனுப்பி மீண்டும் ஆய்வு செய்தோம். தற்போது தணிக்கை செய்துவிட்டோம். தமிழகம் முழுவதும் தற்போது தணிக்கை செய்யப்பட்டு, சிறப்பு ஆய்வுகள் முடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் தற்போது நகை கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. நகை கடன் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி