5 ஆண்டுக்கு முன் தம்பதி கொலையில் மர்மம்: துப்பு கொடுத்தால் ரூ.280 கோடி பரிசு

ஒட்டாவா: கனடாவில் 5 ஆண்டுக்கு முன் மர்மமான முறையில் கொல்லப்பட்ட தம்பதி குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 280 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த தம்பதி பாரி ஷெர்மன் (75) – ஹானி (70) ஆகியோர், அவர்களது வீட்டில் கடந்த 2017ம் ஆண்டு டிச. 15ம் தேதி நாற்காலியில் கட்டிப் போடப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்து கிடந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யார்? என்பது மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் மேற்கண்ட தம்பதியின் குடும்பத்தினர் வெளியிட்ட பொது அறிவிப்பில், ‘பாரி ஷெர்மன் – ஹானி தம்பதி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் 35 மில்லியன் டாலர் அதாவது சுமார் 280 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளனர். தம்பதியின் மர்ம மரணத்தை விசாரித்த புலனாய்வு போலீசார், முதலில் தற்கொலை என்று கூறினர். பின்னர் தம்பதிகள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக கூறினர். ஆனால் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால் தம்பதிகளின் குடும்பத்தினர் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு..!!

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி: 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது, கியர் ஸ்டார்மர் புதிய பிரதமர் ஆனார்