5 ஆண்டுகளாக குடிநீர், சாலை, கழிவுநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை.: புதுக்கோட்டையில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பேனர் வைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அடைப்படை வசதியில்லாததால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பொதுமக்கள் வைத்த பேனரை நகராட்சி ஊழியர்கள் கிழித்து அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வாடுகளில் கடந்த 5 ஆண்டுகளாக  குடிநீர், சாலை மற்றும் கழிவுநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் எடுக்கவில்லை என்று கூறியுள்ள மக்கள், தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பேனர் ஒன்றை வைத்துள்ளனர். இந்தநிலையில் பொதுமக்கள் வைத்த பேனரை நகராட்சி ஊழியர்கள் கிழித்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அந்த போகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மாரியம்மன் கோவில் தெரு, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. . …

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்