5 அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்

புதுச்சேரி, ஜூன் 5: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 28 தொகுதியில் முன்னிலை வகித்து 1.38 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்தியா கூட்டணி சார்பாகவும், காங்கிரஸ் சார்பாகவும் புதுவை மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட எங்களது கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கெள்கிறேன்.

புதுச்சோியில் நடந்த தேர்தல் பணம் மற்றும் அதிகார பலத்துக்கும், மக்களுக்கும் இடையே நடந்த தேர்தல். மக்கள் எங்கள் பக்கம் இருந்து வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளார்கள். பணப்பலத்தையும், அதிகாரப் பலத்தையும் தூக்கி எறிந்திருக்கிறார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் படுதோல்வி அடைந்துள்ளார்கள். பிரதமர் மோடியை மக்கள் ஏற்கவில்லை. பாஜவின் தாமரை சின்னத்தை மக்கள் வெறுத்து இருக்கிறார்கள். பாஜ வேட்பாளர் நமச்சிவாயம் உள்துறை அமைச்சராக இருந்து தேர்தல் களத்தில் நின்றார். அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. புதுவை மக்கள் ஊழல்வாதிகளை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்பது இத்தேர்தல் உதாரணம். மக்களோடு மக்களாக இருக்கிற இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இது ஊழல் அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய பாடம்.

அரசியல் கொள்ளை அடித்து, அந்த பணத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறவர்களுக்கு இது ஒரு பாடம். இந்த ஆட்சியில் முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் ஊழல் பேர்வழிகள். முதல்வர் ரங்கசாமி துறையிலேயே ஊழல் நடக்கிறது. இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாளிக்கத்து, இந்த ஆட்சியாளர்களை ஒதுக்கியுள்ளார். இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் உள்ள 5 அமைச்சர்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி, அமித்ஷா உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை