5-வது சித்தா திருநாளை முன்னிட்டு தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்: ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு மூலிகை செடிகள்; இயக்குநர் டாக்டர் மீனாகுமாரி தகவல்

சென்னை: மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் சென்னை, தாம்பரத்தில் இயங்கி வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் 5-வது சித்தர் திருநாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகைக் கன்றுகள் வழங்கும் விழா கடந்து ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம், கபசுரக்குடிநீர், சூரணம், ஆயில் போன்ற மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பொதுமக்கள் மூலிகை செடிகள் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் இது குறித்து தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் மீனாகுமாரி கூறுகையில்: ஒவ்வொரு ஆண்டும் சித்தர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் 5வது சித்தர் திருநாள் கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து தாம்பரம், சோமங்கலம் போன்ற பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த மருத்துவ முகாம் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். வரும் 23ம் தேதி சித்தர் திருநாள் கொண்டாடப் படுவதையடுத்து பேச்சு போட்டிகள், ஓவிய போட்டிகள், கட்டுரை போட்டிகள் போன்றவை நடத்தப்படுகிறது. மேலும் கொரோனா காலத்தில் கபசுரகுடிநீரின் பயன்கள் பற்றியும், மூலிகை செடிகளின் மருத்துவ சிறப்பையும் மூலிகைத் தோட்டத்தின் பராமரிப்பு மற்றும் பயன்களைப் பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது. தொடர்ந்து இது போன்று மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் பட்சத்தில் சித்த மருத்துவத்தினை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியும். இவ்வாறு டாக்டர் மீனாகுமாரி கூறினார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்