5ம் நாள் ஏலம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி விற்பனை

புதுடெல்லி:  இந்தியாவில் இந்தாண்டு செப்டம்பரில் இருந்து 5ஜி அலைக்கற்றை சேவையை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏலம் கடந்த செவ்வாய் முதல் நடைபெற்று வருகிறது. நேற்றும் 5வது நாளாக ஏலம் நடைபெற்றது. நேற்று முன்தினம் ரூ.1.49,855 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதன்மூலம், 71 சதவீத அலைக்கற்றை விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்றும் 5ம் நாளாக ஏலம் தொடர்ந்து. இதில், ரூ.1,49,966 கோடிக்கு ஏலத்தொகை உயர்ந்தது. இன்றும் ஏலம் நடத்தப்படுகிறது. இந்த ஏலத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ சுனில் மிட்டலின் பாரதி ஏர்டெல், வோடபோனின் ஐடியா மற்றும் அதானியின் அதானி என்டர்பிரசைஸ் ஆகியவை கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. மொத்தம் 9 பிரிவுகளில் 72 ஜிகாஹெட்ஸ் அலைக்கற்றையை ஏலத்தில் விட்டு, ரூ.4.3 லட்சம் கோடியை திரட்ட ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது….

Related posts

சட்டீஸ்கரில் நக்சல் கண்ணி வெடியில் சிக்கி 5 போலீசார் காயம்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் நியமனம்