கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன்பெற்று வருகின்றனர். கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் பலன் பெறுகின்றனர். நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். டெல்லியில் நடைபெறும் 17வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு