4-ம் கட்ட மக்களவை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவு

டெல்லி: 4-ம் கட்ட மக்களவை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக 88 தொகுதிக்கும் 3ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்துள்ளது. இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு 4ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடந்து வருகிறது. இதில், 17.70 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 4-ம் கட்ட மக்களவை தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆந்திரா – 40.26%, பீகார்-34.44%, காஷ்மீர்-23.57%,, ஜார்க்கண்ட்-43.80%, மத்தியப்பிரதேசம் – 48.52% வாக்குப்பதிவானது. மராட்டியம்-30.85%, ஒடிசா-39.30%, தெலுங்கானா-40.38%, உத்தரப்பிரதேசம்-39.68%, மேற்கு வங்கத்தில் 51.87% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

4-ம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 9 மணி வரை 10.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆந்திரா 9.05%, பீகார்-10.18%, காஷ்மீர்-5.07%, ஜார்க்கண்ட் 11.78%, மத்தியப்பிரதேசம் 14.97%, மராட்டியம்-6.45%, ஒடிசா-9.23%, தெலுங்கானா-9.51%, உத்தரப்பிரதேசம் 11.67%, மேற்கு வங்கத்தில் 15.24% வாக்குப் பதிவாகியுள்ளது.

4-ம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை 24.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆந்திரா 23.10%, -22.54%, -14.94%,, ஜார்க்கண்ட்-27.40%, மத்தியப்பிரதேசம் 32.38% , மராட்டியம்-17.51%, ஒடிசா-23.28%, தெலுங்கானா-24.31%, உத்தரப்பிரதேசம்-27.12%, மேற்கு வங்கத்தில் 32.78% வாக்குப் பதிவாகியுள்ளது.

 

 

 

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!