4ம் மாதமாக நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஏமனில் ஹவுதி இலக்குகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்

துபாய்: ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 3 மாதங்களை கடந்து நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 20,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து விட்டனர். பல லட்சம் பாலஸ்தீனியர்கள் தெற்கு காசாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஹமாஸ் படையினருக்கு ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்ஒரு பகுதியாக செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹவுதிக்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. ஏமனில் உள்ள சாதா, அல்ஹூதைதா, தாமர், சானா, ஹொடைடா ஆகிய இடங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் ஒன்றிணைந்து போர் விமானங்கள், போர் கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் ஹவுதி அமைப்பினர் 5 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த தகவலை ஹவுதியின் ராணுவ செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா