உலகில் நாம் காணும் 4வது தொழில் புரட்சி இந்தியாவில் விருப்பங்களினால் இயக்கப்படுகிறது என நம்புகிறேன்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

குஜராத்: உலகில் நாம் காணும் நான்காவது தொழில் புரட்சி இந்தியாவில் விருப்பங்களினால் இயக்கப்படுகிறது என நம்புகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் காந்திநகரில் மகாத்மா மந்திரில் செமிகான் இந்தியா 2023 மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் சேமிகண்டக்டர் சூழல் அமைப்பை ஊக்கப்படுத்துதல் எனும் தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாக கொண்டு மாநாடு நடைபெறுகிறது.

செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி உள்ளிட்டவற்றை விரிவுப்படுத்தும் முயற்சியாக மாநாடு நடைபெறுகிறது. செமிகான் இந்தியா 2023 மாநாட்டில் மைக்ரான், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி, மென்பொருளைப் புதுப்பிப்பது எப்படி அவசியமோ அதேபோன்றதுதான் இந்த நிகழ்வு. செமிகான் இந்தியா மூலம் தொழில்துறை, வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடனான உறவுகள் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன. உறவுகளின் ஒத்திசைவுக்கு இது அவசியம் என்றும் நான் நினைக்கிறேன்.

இந்தியாவின் டிஜிட்டல் துறை மற்றும் மின்னணு உற்பத்தியில் அதிவேக வளர்ச்சியைக் காண்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா இந்தத் துறையில் வளர்ந்து வரும் வீரராக இருந்தது. இன்று, உலகளாவிய மின்னணு உற்பத்தியில் நமது பங்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. 2014ல் இந்தியாவின் மின்னணு உற்பத்தி மதிப்பு 30 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்தது. இன்று 100 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது.

செமி கண்டக்டர்கள் நமது தேவை மட்டுமல்ல. உலகிற்கு நம்பகமான சிப் விநியோகச் சங்கிலியும் தேவை. இப்போது உலகில் நாம் காணும் நான்காவது தொழில் புரட்சி இந்தியாவிவ் விருப்பங்களினால் இயக்கப்படுகிறது என நம்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், இந்தியாவில் 300 கல்லூரிகளில் செமி கண்டக்டர் படிப்புகள் நடத்தப்படுகின்றன. செமி கண்டக்டர் தொழில் இந்தியாவில் அதிவேக வளர்ச்சியை காணும். இந்த துறையில் முதலீடு செய்வதற்கு இந்தியா ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும்.

மொபைல் உற்பத்தியும் இந்தியாவில் அதிகரித்து உள்ளது. 80 கோடி பேர் இந்தியாவில், இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். ஏராளமான மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. சிப் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் அளித்து வருகிறோம் எனவும் பேசினார். உலகளாவிய குறைக்கடத்தி தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என அழைப்பு விடுத்து பேசியுள்ளார். முதலில் வருபவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்றும் பிரதமர் வலியறுத்தியுள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி