4 கட்ட தேர்தலில் பாஜவுக்கு தோல்வி: அகிலேஷ் யாதவ் கணிப்பு

லக்னோ: நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களிலும் பாஜ தோல்வியை சந்திந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். அதில், ஊழலில் திளைத்துள்ள பாஜ அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட மக்களுக்கு தேர்தல் மூலம் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களில் பாஜவுக்கு தோல்வி நிச்சயம். இன்று நடைபெறும் 5ம் கட்ட தேர்தலிலும் எதேச்சாதிகார பாஜவை வீழ்த்த அனைவரும் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்