4 வேட்பு மனுக்களை வாங்கிய வருண் காந்தி: பிலிபித் தொகுதியில் மீண்டும் போட்டி?

பிலிபித்: சஞ்சய் காந்தி- மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி. இவர் ராகுலுக்கு எதிராக பாஜவில் களமிறக்கப்பட்டார். இவர் கடந்த 2014ல் சுல்தான்பூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ல் பிலிபித் தொகுதிக்கு மாறினார். இவர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மோடி தலைமையிலான பாஜ ஆட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால், அவருக்கு மீண்டும் பாஜ சீட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று வருண் காந்தி தரப்பில் 4 வேட்பு மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருண் காந்தியின் செய்தி தொடர்பாளர் எம்.ஆர்.மாலிக் கூறியதாவது, “வருண் காந்தியின் வழிகாட்டுதலின்படி 4 வேட்பு மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது. பிலிபித் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு