4 ஏடிஜிபிக்களுக்கு புதிய பதவி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அபய்குமார் சிங் நியமனம்: சிபிசிஐடி ஏடிஜிபியாக வெங்கட்ராமன் மாற்றம்

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஏடிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2 ஏடிஜிபிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: சிபிசிஐடி ஏடிஜிபி அபய்குமார் சிங், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகவும், தலைமையிடம் மற்றும் நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி வெங்கட்ராமன், சிபிசிஐடி ஏடிஜிபியாகவும், கமாண்டோ படை ஏடிஜிபி பாலநாகதேவி, நிர்வாகப் பிரிவு மற்றும் கூடுதல் பணியாக தலைமையிட ஏடிஜிபியாகவும், ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம், கமாண்டோ படை ஏடிஜிபி பதவியை கூடுதலாகவும் கவனிப்பார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த கந்தசாமி, கடந்த 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்