பானிபூரியில் உப்பு குறைவாக உள்ளதாக கூறி பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது

திருப்பூர்: அவினாசிபாளையத்தில் பேக்கரியில் தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பெருந்தொழுவில் உள்ள பேக்கரியில் நேற்று முன்தினம் 4 பேர் பானிபூரி சாப்பிட்டுள்ளனர். அப்போது பானிபூரியில் உப்பு குறைவாக உள்ளது என அவர்கள் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றவே 4 பேரில் ஒருவர் பெட்ரோல் குண்டை பேக்கரி மீது வீசியுள்ளார். தொடர்ந்து 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து பேக்கரியை கவனித்து வந்த சதீஷ்குமார் (30)அவினாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் பேக்கரியில் பெட்ரோல் குண்டு வீசியது திருப்பூர் செரங்காட்டை சேர்ந்த அஸ்வின் (21), தில்லைநகரை சேர்ந்த பூவலிங்கம் (25), சந்திராபுரத்தை சேர்ந்த சக்தி கணேஷ் (23), செவந்தாம்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் (23) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்