4 திரிணாமுல் எம்எல்ஏக்கள் பதவியேற்பு: விழாவை தவிர்த்த ஆளுநர்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 4 எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், பாக்டா, ரானாகாட் தக்சின் மற்றும் மனிகட்லா ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 10ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கிருஷ்ணா கல்யாணி, மதுபர்னா தாகூர், முகுத் மணி அதிகாரி மற்றும் சுப்தி பாண்டே ஆகிய நான்கு பேரும் நேற்று எம்எல்ஏக்களாக பதவியேற்றுக்கொண்டனர். சட்டப்பேரவையில் சபாநாயகர் பீபன் பானர்ஜி அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் மம்தா இதில் கலந்து கொண்டனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு