சென்னையில் கடந்த வாரத்தில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 49 குற்றவாளிகள் அதிரடி கைது: 33 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னையில் கடந்த வாரத்தில் நடைபெற்ற சிறப்பு சோதனையில் 49 குற்றவாளிகள் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 31.03.2023 முதல் 06.04.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 49 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 164 கிலோ 18 கிராம் கஞ்சா, 7.8 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 690 கிராம் மெத்தகுலோன், 14 நைட்ரேவிட் உடல் வலி நிவாரண மாத்திரைகள், 17 செல்போன்கள், ரொக்கம் ரூ.1,100 மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிடும்படியாக, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 01.04.2023 அன்று சைதாப்பேட்டை, கலைஞர் வளைவு அருகே கண்காணித்து, சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நிலம்பரா பிரதான், வ/41, த/பெ.பிபின் பிரதான், கண்டமால், ஒடிசா மாநிலம் என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 11 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல, திருவல்லிக்கேணி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 01.04.2023 அன்று பெரியமேடு, மூர்மார்க்கெட் அருகில் கண்காணித்து, அங்கு சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த கணேலு கிருஷ்ணா, வ/22, த/பெ.கணேலு சந்திர ராவ், பெருபங்கா, ராயகடா, ஒடிசா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 01.04.2023 அன்று தண்டையார்பேட்டை, இரயில்வே ஸ்டேஷன் ஆட்டோ நிறுத்தம் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை செய்து, சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த ஜெயபிரபு, வ/37, த/பெ.ராமு, எண்.85, ஆண்டிப்பட்டி, தேனி மாவட்டம் என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. N-1 இராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 02.04.2023 அன்று காலை, இராயபுரம், G.M.பேட்டை ரோட்டில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரணை செய்து காரில் கஞ்சா கடத்தி வந்த 1.முத்துவேல் வ/30, த/பெ.சங்கர், கண்ணகி நகர் 3வது குறுக்கு தெரு, ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை, 2.கார்த்திக், வ/26, த/பெ.நந்தீஸ்வரன், பெரியார் நகர் 8வது தெரு, மேற்கு தாம்பரம், சென்னை, 3.சத்யா, வ/30, த/பெ.தனசேகர், இராணி அண்ணாநகர், இரும்புலியூர், மேற்கு தாம்பரம், 4.வினோத், வ/25, த/பெ.முத்து, கண்ணகிநகர் 8வது குறுக்கு தெரு, ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 36 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 03.04.2023 அன்று கண்காணித்து சட்டவிரோதமாக கஞ்சா வைத்து விற்பனை செய்த புதிபாமன்நாயக், வ/24, த/பெ.பஜமான் நாயக், ஒடிசா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 13 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு புதிபாமன் நாயக் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். அண்ணாநகர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 03.04.2023 அன்று ரெட்டேரி சந்திப்பில் கண்காணித்து அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ய ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த ராஜேஷ், வ/29, த/பெ.சந்திரன், திரிசூர் மாவட்டம், கேரளா மாநிலம் என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது திருவல்லிக்கேணி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 03.04.2023 அன்று பெரியமேடு மூர் மார்க்கெட் அருகே கண்காணித்து, சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த பிரசாந்த்,, வ/42, த/பெ.வாசுதேவன் நாயர், கொல்லம், கேரள மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதே காவல் குழுவினர் 03.04.2023 அன்று மாலை பெரியமேடு, மூர்மார்க்கெட் அருகில் கண்காணித்து, அங்கு சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த சுபாஷிஷ் பெஹ்ரா, வ/28, த/பெ.பிரபந்து பெஹ்ரா, நயாகரா மாவட்டம், ஒடிசா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 05.04.2023 அன்று ஆதம்பாக்கம், பிருந்தாவனம் ரோடு, ஏரிக்கரை தெரு சந்திப்பில் கண்காணித்து மேற்படி இடத்தில் விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை மறைத்து வைத்திருந்த ராசாநந்த பத்ரா, வ/33, த/பெ.ரிகர் பத்ரா, பாலேஸ்வர், ஓடிசா மாநிம் என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 2 கிலோ 450 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 05.04.2023 அன்று காலை, புது வண்ணாரப்பேட்டை, எஸ்.என்.செட்டி தெரு மற்றும் பூண்டி தங்கம்மாள் தெரு சந்திப்பு அருகே சட்டவிரோதமாக போதை பொருள் வைத்திருந்த நரேஷ்குமார், வ/23, த/பெ.இளமாறன், B பிளாக், பூண்டி தங்கம்மாள் தெரு, புது வண்ணாரப்பேட்டை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 600 கிராம் மெத்தகுலோன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 05.04.2023 அன்று தண்டையார்பேட்டை, சஞ்சீவிராயன் தெரு மற்றும் பால அருணாச்சலம் தெரு சந்திப்பு அருகே சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த 1.பிரவீன்குமார், வ/18, த/பெ.நவநீதம், செல்வ விநாயகர் கோயில் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை, 2.எட்வின் டேனியல், வ/19, த/பெ.அலெக்ஸ் பாண்டியன், 59வது பிளாக், வ.உ.சி.நகர், தண்டையார்பேட்டை, 3.ஶ்ரீபன், வ/22, த/பெ.சீனிவாசன், கும்மாளம்மன் கோயில் தெரு, தண்டையார்பேட்டை, 4.அஜித், வ/20, த/பெ.செல்வராஜ், P தெரு, திருவள்ளுவர் நகர், புது வண்ணாரப்பேட்டை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 14 நைட்ரவிட் என்ற உடல்வலி நிவாரண மாத்திரைகள், 4 செல்போன்கள் மற்றும் பணம் ரூ.1,100/- பறிமுதல் செய்யப்பட்டது. புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (06.04.2023) அன்று கண்காணித்து சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா மற்றம் கஞ்சா சாக்லேட்டுகள் வைத்திருந்த அனுப்குமார், வ/25, த/பெ.கிருஷ்ணயாதவ், பீகார் மாநிலம் 2.கதாதர் தாஸ், வ/40, த/பெ.பரசுராம் தாஸ், பாலேஸ்வர், ஓடிசா மாநிலம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5.1 கிலோ கஞ்சா, 5.35 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள்,

உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 654 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,483 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 783 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை