நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

நைஜீரியா: நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதி வெடித்துச் சிதறியதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். நைஜர் மாகாணம் அகெயி நகரில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்துகுள்ளானது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் நைஜர் மாகாணம் அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று எரிபொருள் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு லாரி எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 லாரிகளும் வெடித்து சிதறின. இச்சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர், போலீசார் சம்பவ இடத்திற்கு படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்