அமெரிக்க அரசு நிதி நிறுவனம் அதானிக்கு 4,600 கோடி நிதியுதவி

புதுடெல்லி: அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம், இலங்கையின் ஜான் கெல்ஸ் ஹோல்டிங் மற்றும் இலங்கை துறைமுக கழகம் இணைந்த கூட்டமைப்பானது, கொழும்பு துறைமுகத்தில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தை உருவாக்கி வருகிறது. இந்த திட்டம் இலங்கையில் இருந்து ஏற்றுமதியை அதிகரிக்கவும், பொருளாதாரம் மேம்படவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, அமெரிக்க அரசு நிதி நிறுவனமான, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் ( டிஎப்சி) ₹4,600 கோடி நிதி உதவி வழங்குவதாக அறவித்துள்ளது. இதுபற்றி அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவின் நிதியுதவி, கொழும்புவில் கன்டெய்னர் முனையம் மேம்படுவதற்கும், இதன்மூலம் இலங்கையின் பொருளாதாரம் உயரவும் வழி வகுக்கும்’ என தெரிவித்துள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது