வரி பகிர்வில் அநீதி இழைத்த ஒன்றிய அரசு 4 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி இழப்பு: முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்திற்கு ரூ.62 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசின் பட்ஜெட் அளவு இரு மடங்காக உயர்த்தப்பட்டாலும், மாநிலத்தின் மானியம் மட்டும் அதிகரிக்கவில்லை என கூறி ஒன்றிய அரசுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா தலைமையில், கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் நாளை டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தின் பதிவில், 15வது நிதி கமிஷனுக்கு பிறகு வரி பகிர்வு பங்கு குறைக்கப்பட்டுள்ளது.

இது கர்நாடக மாநிலத்திற்கு மிக ெபரிய சவாலாக அமைந்துள்ளது. இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அநீதியை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக மாநிலத்தின் நலனை பாதுகாக்க நியாயமான முறையில் நாம் அனைவரும் இணைந்து வலியுறுத்த வேண்டும். தென்மாநிலங்களின் வரிப்பணம் வடக்கு மாநிலங்களுக்கு செல்கிறது. இதனால் ஒருபோதும் நமக்கு எந்த பயனுமில்லை. நமது மாநில மக்களின் வரிப்பணம் மாநிலத்தின் இக்கட்டான சூழ்நிலையில் பயன்படாது. கடினமான உழைப்பால் கர்நாடகம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

Related posts

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நைனாமலை பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!