44 ரன்னில் சுருண்டது நெதர்லாந்து

ஷார்ஜா: உலக கோப்பை டி20 தகுதிச் சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு), இலங்கையுடன் மோதிய நெதர்லாந்து 44 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீசியது. நெதர்லாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுக்க, அந்த அணி 10 ஓவரில் 44 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (4 பேர் டக் அவுட்). கோலின் ஏக்கர்மேன் அதிகபட்சமாக 11 ரன் எடுத்தார். இலங்கை பந்துவீச்சில் லாகிரு குமாரா, ஹசரங்கா தலா 3, தீக்‌ஷனா 2, சமீரா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய இலங்கை 7.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்து அபாரமாக வென்றது….

Related posts

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் சின்னர் ராடுகானு வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து: கால்இறுதியில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி; சொந்த மண்ணில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது ஜெர்மனி