44 ஆயிரம் பெண்களின் விவரங்கள் பதிவேற்றம் போளூரில் மேலும் நீட்டிக்க மக்கள் கோரிக்கை மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம் நிறைவடைந்தது

போளூர்,ஆக. 24: மகளிர் உரிமை தொைக சிறப்பு முகாம் நிறைவடைந்தது. இதில் போளூரில் 44 ஆயிரம் பெண்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்டு 4ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாம் ஆகஸ்டு 5 ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலும் நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த முகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விடுப்பட்டவர்களுக்குகாக கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் மூன்று நாள் சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நிலையில் கடந்த 20ம் தேதியுடன் நிறைவடைந்தது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக இதுவரை 1.54 கோடி பெண்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் பரிசீலனைக்கு எடுத்து உள்ளனர். இந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா?, நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்த விவரம், கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தால், அவாகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம். ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் செப்டம்பரில் உரிமை தொகையை வங்கி கணக்கில் போடப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போளூர் பகுதியில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் 11 ஆயிரம் உள்ளனர். இவர்கள் பதிவு பதிவு செய்ய முகாமை நீட்டிக்கவேண்டும். சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு