43 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

அரூர், மார்ச் 28: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், கால்டைகளை வாங்க வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில், ஒரு மாடு ₹5,500 முதல் ₹47,500 வரையும், ஆடு ₹5,500 முதல் ₹10,500 வரை விற்பனையானது. மொத்தம் ₹43 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்