கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 411.1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 748 பேர் கைது

சென்னை: கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 411.1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 748 பேர் கைது செய்யப்ப்ட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்ட அறிக்கை: கடந்த செப்.1ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.61 லட்சத்து 25 ஆயிரத்து 763 மதிப்புள்ள 4111 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 151 எரிவாயு உருளைகள், 747 கிலோ கோதுமை, 186 கிலோ துவரம்பருப்பு, 1481 லிட்டர் மண்ணெண்ணெய், 3 பாக்கெட் பாமாயில், சர்க்கரை 37 கிலோ ஆகியவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 158 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றச்செயலில் ஈடுபட்ட 748 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காத்திருப்பு அறையை திறப்பதுபோன்று வீடியோ: யூடியூபர் வாசன் மீது வழக்கு

காதலிக்க வற்புறுத்தி 2 பேர் டார்ச்சர் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் மீட்டு வந்த பெற்றோர் வெட்டிக்கொலை