Sunday, June 30, 2024
Home » 410 மனுக்கள் மீது துறை வாரியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு செய்யாறு அருகே வெம்பாக்கம் ஜமாபந்தி 3ம் நாள் முகாமில்

410 மனுக்கள் மீது துறை வாரியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு செய்யாறு அருகே வெம்பாக்கம் ஜமாபந்தி 3ம் நாள் முகாமில்

by Karthik Yash

செய்யாறு, ஜூன் 22: செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகாவில் நேற்று ஜமாபந்தி முகாம் 3ம் நாளில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் 410 மனுக்களைப் பெற்று துறை வாரியாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகாவில் கடந்த 19ம் தேதி 1433 பசலி வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை எனப்படுகின்ற ஜமாபந்தி நிகழ்வு மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் பூஜை செய்து முகாமை தொடங்கி வைத்தார். முதல் நாள் முகாமில் 177 மனுக்களும், இரண்டாவது நாளாக 202 மனுக்கள் பெறப்பட்டு துறை வாரியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று வெம்பாக்கம் உள்வட்டத்திற்குட்பட்ட கீழ்நெல்லி, திருவடிராயபுரம், சோழவரம், பெரும்புலிமேடு, அரியரப்பாக்கம், கனகம்பாக்கம், செல்லபெரும்புலிமேடு, நமண்டி, அழிஞ்சல்பட்டு, நரசமங்கலம், செட்டித்தாங்கல், ஒழுக்கவாக்கம், வெங்களத்தூர், வடமாவந்தல், சித்தாத்தூர், திருப்பனமூர், திருப்பனங்காடு, பில்லாந்தாங்கல், கரந்தை, காகனம் ஆகிய 20 கிராம பொது மக்களிடமிருந்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதில் பட்டா மாறுதல் – 156, உட்பிரிவு பட்டா மறுதல்- 78, அளந்து அத்து காட்டுதல் – 18, ஆக்கரமிப்புகளை அகற்றுதல் 17, புதிய குடும்ப அட்டை கோரி-4, இலவச வீட்டுமனைபட்டா – 36, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை – 17 இதர துறைகள்-51, இதர மனுக்கள் 33 ஆக மொத்தம் 410 மனுக்களை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பெற்று துறை ரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மரக்கன்றினை நட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் ஹரகுமார், மாவட்ட அலுவலக மேலாளர் (பொது) ரவி, நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, வெம்பாக்கம் தாசில்தார் பா.துளசிராமன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் க.பெருமாள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் முகாமில் பங்கேற்றிருந்தனர்.

You may also like

Leave a Comment

13 + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi