40,000-க்கும் மேல் தங்கத்தின் விலை தாண்டி உள்ளது…விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.408 குறைவு

சென்னை: தங்கம் விலை கடந்த 4 மாதமாக ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்வை சந்தித்தது. கடந்த 1ம் தேதி ஒரு சவரன் ரூ.38,384க்கும், 2ம் தேதி சவரன் ரூ.39,024க்கும், 3ம் தேதி சவரன் ரூ.38,912க்கும் விற்கப்பட்டது. 4ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.4,873க்கும், சவரன் ரூ.38,984க்கும் விற்கப்பட்டது. 5ம் தேதி ஒரு சவரன் ரூ.39,760க்கும் விற்கப்பட்டதுஇந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடி குறைவை சந்தித்தது. காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.51 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,020 க்கும், சவரனுக்கு ரூ.408 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,160 க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1.10 குறைந்து, ரூ. 74.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை ஏற்ற தாழ்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ரஷ்யா, உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதன் தாக்கம் உலக சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை  ஏற்ற தாழ்வாக காணப்படுகிறது. போர் தொடரும் பட்சத்தில் தங்கம் விலை இதே வேகத்தில் உயர்ந்து கொண்டு தான் இருக்கும். எவ்வளவு உயரும் என்பதை சொல்ல முடியாது. அதாவது தினம், தினம் தங்கம் புதிய உச்சத்தை தொடும். போர் பதற்றம் தணியும் பட்சத்தில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. அதுவரையில் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை….

Related posts

அமெரிக்காவின் பெடரல் வங்கி 0.5% வட்டி விகிதம் குறைப்பு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600க்கு விற்பனை!!

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை