40 சதுர அடியில் வீடுகளில் செங்குத்துத் தோட்டம் அமைக்கலாம்

மானியம்செங்குத்துத் தோட்டம் நவீன தோட்டக்கலையின் முக்கிய அங்கமாகும். சுவர்களில் செடிகளை தொங்கவிட்டு வளர்க்கும் முறை. நகர்ப்புற வீடுகளில் இவ்வாறு வளர்க்கும்போது சுவர்கள் பசுமையாகவும் வீட்டை அழகாகவும் மாற்றுகின்றது. காற்றில் இருக்கின்ற சூடான வாயுக்களை உறிஞ்சிக்கொள்கிறது. இதன் மூலம் வீட்டின் உட்புற மற்றும் வெளிப்புற பகுதியில் நிலவக்கூடிய வெப்பநிலையைக் குறைத்து  தூய்மையான காற்றை தருகின்றது. குறைந்த இடத்தில் காய்கறிகள் மற்றும் அழகுச் செடிகள் வளர்க்கலாம். நஞ்சில்லா காய்கறிகளை அறுவடை செய்து மகிழலாம். இந்த செங்குத்துத் தோட்டத்திற்கு புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, வெங்காயம், கீரைகள் போன்றவை சிறந்த தேர்வு. தவிர அழகுச் செடிகளையும் வளர்க்கலாம். தோட்டக்கலைத் துறை சார்பில்  முதற்கட்டமாக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 250 வீடுகளில் செங்குத்து தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு 50 சதவீதம் (ரூ.15 ஆயிரம்) மானியம் வழங்கப்படுகிறது. இந்த செங்குத்துத் தோட்டம் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவையான காய்கறி, கீரைகளை மண்ணில்லா முறையில் குறைந்த அளவு இயற்கை உரம் பயன்படுத்தி வளர்க்கலாம். நகர்ப்புற வீடுகள், அபார்ட்மென்ட், பால்கனியிலும் செங்குத்துத் தோட்டம் அமைக்கலாம். இதற்கு நல்ல சூரியஒளி, காற்றோட்டம் உள்ள இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இது போன்ற செங்குத்துத் தோட்டம் அமைக்க 40 சதுரஅடி போதுமானது. மானியத்தில் செங்குத்துத் தோட்ட அழகானது புற ஊதாக் கதிர்வீச்சு பாதுகாப்புடன் கூடிய எம்எஸ் பிரேம் கட்டமைப்பு, 80 பி.வி.சி தொட்டிகள், 160 ஜிஎஸ்எம் நைலான் பின்னப்பட்ட ஜியோ டெக்ஸ்டைல் பேப்ரிக், தேங்காய் நார்க்கழிவு, செம்மண், மண்புழுஉரம், பெரிலைட், இயற்கை உரம் கலந்த மண்ணற்ற ஊடகக் கலவை, சொட்டு நீர்ப்பாசன அமைப்பு மற்றும் கீரைகள், கொத்தமல்லி, முள்ளங்கி, வெங்காயம், புதினா போன்றவற்றின் விதைகள் மற்றும் நடவுச் செடிகள் போன்றவை வழங்கப்படும். ஒரு பயனாளிக்கு ஒரு தொகுப்பு மட்டுமே. பயனாளிகளின் தேர்வு இணையவழி மூலம் மட்டுமே நடத்தப்படும். இதில், விருப்பமுள்ள பயனாளிகள், www.tnhorticulture.tn.gov.in என்ற இணையவழியின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்….

Related posts

ஆப்பிள், காபி, அவகோடா… அரியலூரில் அம்சமாக விளையுது!

வேளாண் சுற்றுலா மையமான தரிசு நிலம்!

குழியடிச்சான்