40 ஆண்டுகளாக இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்ட பக்தர்களை கௌரவித்து சிறப்பிக்கிறார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை; அருள்மிகு ஐயப்ப சுவாமி திருவிளக்கு பூஜை விழாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலை யாத்திரை சென்ற பக்தர்களை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர்  திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் சிறப்பு செய்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அருள்மிகு ஐயப்ப சுவாமிக்கு கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்வது ஐயப்ப பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இப்பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் திருக்கோயில்கள் சார்பாக திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை, சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பாக, சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், பசுமை வழிச்சாலையில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், 14.12.2022 அன்று மாலை 4.00 மணிக்கு, அருள்மிகு ஐயப்ப சுவாமிக்கு  திருவிளக்கு பூஜை  சிறப்பு விழாவாக நடைபெற உள்ளது. இவ்விழாவில், அருள்மிகு ஐயப்பன் வரலாற்றை சித்தரிக்கும் நாடகத்தை வைஷ்ணவி குழுவினரும் ஐயப்பனைப் போற்றி பாடும் பஜனைகளை வீரமணி குழுவினரும் நடத்த உள்ளனர். தொடர்ந்து சொல்வேந்தர் சுகி சிவம் மற்றும் கலைமாமணி தேசமங்கையர்க்கரசி அவர்களின் ஆன்மிக சொற்பொழிவுகளுடன் பஞ்சவாத்திய முழக்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, கடந்த 40 ஆண்டுகளாக விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை மேற்கொண்ட பக்தர்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கௌரவித்து சிறப்பு செய்ய  உள்ளார். இவ்விழாவில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் எஸ். மதன் மோகன், மாநகராட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேலும், இவ்விழாவிற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு பிரசாதம் மற்றும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை