40வது வார்டில் குறைகேட்பு முகாம்மக்களின் கோரிக்கைகள் அனைத்தும்முழுமையாக நிறைவேற்றித் தரப்படும்

தூத்துக்குடி, ஏப். 6: மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றித் தரப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் உறுதி கூறினார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 52 வார்டுகளிலும் மக்கள் குறைகளை கேட்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் குறைதீர்க்கும் முகாம்களை நடத்தி வருகிறார். 40வது வார்டு பகுதியான தெற்குகாட்டன் சாலை, மரக்குடி தெரு, செயின்ட் பீட்டர் கோவில் தெரு பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன், பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

அப்போது அவரிடம் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் கீதாஜீவன், பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றித் தருவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோனிஸ்டாலின், துணை அமைப்பாளர் சேசையா, வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் ரிக்டா, மாநகர மீனவரணி ஆர்தர் மச்சாது, தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், தொமுச மரியதாஸ், தொண்டரணி முருகஇசக்கி, இளைஞரணி அருண்சுந்தர், அல்பர்ட், பிரதீப், பாஸ்கர், வட்ட செயலாளர் டென்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை