திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 63,932 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,862 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.13 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 23 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

இவர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில் வார விடுமுறை நாட்களான நாளையும், நாளை மறுதினமும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் சுவாமியை தரிசிக்க மேலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என தெரிகிறது.

Related posts

சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு