4 வயது சிறுவன் அசத்தல் குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் மூடிகளை கொண்டு ஓவியம்

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே எலந்தங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் ஹாஜாமைதீன்- ரசியாஜாஸ்மீன் தம்பதி. இவர்களது மகன் ஹாசிப்(4). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வருகிறார். ஹாசிப் வீட்டில் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வாங்கி பயன்படுத்தி விட்டு தூக்கிவீசப்படும் பாட்டில் மூடிகளை கொண்டு மரம் மற்றும் இயற்கை காட்சிகளை ஓவியமாக வரைந்ததோடு, அதுகுறித்து பள்ளியில் பயிலும் சக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதனை பள்ளிக்கு எடுத்துவந்து  பள்ளி முதல்வர் இந்திராதேவியிடம் நேற்று வழங்கினார். மேலும் அந்த மாணவர், சக மாணவர்கள் பிளாஸ்டிக் குப்பைகளை கண்ட இடங்களில் வீசி செல்லாமல், அதனை எவ்வாறு கலை நயமிக்கதாக மாற்ற முடியும் என்பதை காட்டி மழலை மாறாமல் எடுத்துக்கூறியது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது….

Related posts

கதர் தொழிலுக்கு கை கொடுக்க, தேச நலன் காக்க கதர் ஆடைகளை அணிய வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வராததால் கல்வித்துறை பணியாளர்கள் ஊதியம் வழங்கவில்லை; ஊதியம் வழங்க மாற்று ஏற்பாடு செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

காந்தி மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தினமும் தூய்மைப்படுத்தும் பணி : ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி