4 லட்சம் பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு ரூ1,625 கோடி நிதி: பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

புதுடெல்லி: தீன்தயாள் அந்த்யோத்யா யோஜனாவின் கீழ் நாடு முழுவதும் 4 லட்சம் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மூலதன நிதியாக ரூ1,625 கோடி விடுவிக்க இருக்கிறார்.  கிராமப்புற ஏழை குடும்பங்களை படிப்படியாக சுய உதவி குழுக்களாக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரங்களை பன்முகப்படுத்தவும், வருமானம், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தற்சார்பு பெண்கள் சுய உதவிக் குழுவினருடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாட இருப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் கூறுகையில், `நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுவினருக்கு ₹1625 கோடி மூலதன நிதி உதவியை பிரதமர் நாளை (இன்று) விடுவிக்கிறார்.  மேலும், உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின், பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 7,500 பேருக்கு ₹25 கோடியை முதலீட்டு பணமாகவும் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்பட்ட 75 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ₹4.13 கோடி நிதியையும் பிரதமர் விடுவிக்கிறார்,’ என்று கூறப்பட்டுள்ளது….

Related posts

மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்

ரஷ்யா, ஆஸ்திரியாவுக்கு பிரதமர் மோடி பயணம்