4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் இனப்படுகொலை: பாஜ மீது மம்தா குற்றச்சாட்டு

சிலிகுரி: மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் 4ம் கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, கூச் பெகாரில் உள்ள சிதல்குச்சி வாக்குச்சாவடியில் பாஜ – திரிணாமுல் இடையே மோதல் வெடித்தது. 300க்கும் மேற்பட்டோர் கூடி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக துணை ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இருதரப்பு மோதலில் அப்பாவி வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இதனால், இப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. எனவே, அரசியல் தலைவர்கள் இப்பகுதிக்கு 72 மணி நேரத்துக்கு செல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்தது.சிலிகுரியில் தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று சென்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘கூச் பெகரரில் நடந்தது இனப் படுகொலை. பாஜ.தான் இதற்கு காரணம். சிதல்குச்சியில் துணை ராணுவப்படையினர் துப்பாக்கி குண்டுகளை மழைபோல் பொழிந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றிய உண்மைகளை மறைப்பதற்காகவே, அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு 72 மணி நேரத்துக்கு செல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. குறிப்பிட்ட துணை ராணுவப்படை மக்களை துன்புறுத்தியும், அச்சுறுத்தியும் வருவதாக, முதல் கட்ட தேர்தலில் இருந்தே நான் குற்றம்சாட்டி வருகிறேன். ஆனால், இதை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை,’’ என்றார்.* வன்முறையை தூண்டுகிறார்மேற்கு வங்கத்தில் உள்ள சாந்திபூரில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘பாதுகாப்பு படைகளை முற்றுகையிடும்படி மக்களுக்கு மம்தா விடுத்த அழைப்புதான், கூச் பெகாரில் நடந்த மோதலுக்கு காரணம். இந்த வன்முறைக்கு நான்தான் காரணம் என அவர் கூறுவது அபத்தமானது. துணை ராணுவம் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை அவர் அரசியலாக்கி வருகிறார். வன்முறையை அவர்தான் தூண்டுகிறார்,’’ என்றார்….

Related posts

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு