4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

புழல்: சென்னையில் இருந்து ரேஷன் அரிசி லாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சென்னையிலிருந்து ஆந்திரா நோக்கி சந்தேகத்திற்கிடமாக சென்ற ஒரு மினிலாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகளில் சுமார் 4000 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, லாரி டிரைவர் நெமிலிச்சேரியை சேர்ந்த ஹரிஹரனை (26) கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்தனர்….

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்