4 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்தது நாளை நுகர்வோர் குறைதீர் கூட்டம் குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம்

 

கும்பகோணம்: நாளை நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கும்பகோணம் கோட்ட செயற்பொறியாளர் திருவேங்கடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கும்பகோணம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெறுகிறது.

இந்த குறைதீர்க்கும் நாள கூட்டத்தில் கும்பகோணம் மாநகரம், புறநகர், பாபநாசம் நகர், புறநகர், கபிஸ்தலம் அய்யம்பேட்டை, திருக்கருகாவூர், கணபதி அக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் பிரிவு அலுவலக பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர்கள் நேரில் வந்து கலந்து கொண்டு மின் விநியோகம் தொடர்பான தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஜாலியாக உலா வந்த காட்டுயானை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் மறியலில் ஈடுபட முயன்ற டிட்டோ ஜாக் அமைப்பினர் 51 பேர் கைது

விக்கிரவாண்டி தொகுதியில் நீலகிரி திமுகவினர் பிரசாரம் கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் கன மழை கரடி தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்

பூத்து குலுங்கும் டெய்சி மலர்கள்