4 ஆண்டு ஹானர்ஸ் பட்டம் அறிமுகம்; இளங்கலை படிப்பில் அதிரடி மாற்றங்கள்: பல்கலை. மானிய குழு அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய கல்வி திட்டத்தின் கீழ் இளங்கலைப் படிப்புகளில் அதிரடி மாற்றங்களை பல்கலைக் கழக மானிய குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக் கழக மானிய குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து பாடப்பிரிவுகளிலும் 4 ஆண்டு ஹானர்ஸ் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் 160 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஹானர்ஸ் பட்டம் மற்றும் ஆராய்ச்சியுடன் கூடிய ஹானர்ஸ் பட்டம் வழங்கப்படும். முதல் 6 செமஸ்டர்களில் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்கள் ஆய்வு படிப்பை மேற்கொள்ள விரும்பினால், 4வது ஆண்டில் சேரலாம்.  அவர்களுக்கு இளங்கலை ஹானர்ஸ் பட்டம் வழங்கப்படும். இளங்கலை படிப்பில் 40 மதிப்பெண்களுடன் முதலாம் ஆண்டில் படிப்பை நிறுத்த விரும்பும் மாணவர்கள் முதலாமாண்டு கோடை விடுமுறையில் கூடுதலாக 4 மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு தொழிற்கல்வி படிப்பை முடித்திருந்தால், அவர்கள் 3 ஆண்டிற்குள் மீண்டும் சேர்ந்து, 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். அதே போல், 80 மதிப்பெண்களுடன் 2வது ஆண்டில் படிப்பை நிறுத்த விரும்பும் மாணவர்கள் 2வது ஆண்டு கோடை விடுமுறையில் கூடுதலாக 4 மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு தொழிற்கல்வி படிப்பை முடித்திருந்தால், அவர்கள் 3 ஆண்டிற்குள் மீண்டும் சேர்ந்து, 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து