4 பேருக்கு மறுவாழ்வு விருது தேர்வுக்குழுவில் அங்கீகாரம் உயர்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி

 

திருச்சி, ஜூலை 17: டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தேர்வுக்குழுவில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுக்குழு உறுப்பினர் பிரதநிதித்துவம் வழங்கியதற்காக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வௌியிட்டுள்ளனர்.
இதுகுறித்த அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் அன்பரசன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டுகளில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தேர்வுக்குழுவில் வட்டாரக்கல்வி அலுவலர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படாமல் இருந்தது.

தொடர்ந்து அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்தமாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற சங்கங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று 2023 -2024 ம் கல்வி ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தேர்வுக்குழுவில் உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து அதில் உறுப்பினராக சேர்த்த தமிழக அரசிற்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் தங்களுடைய நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை